உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

History

Found

Uruthirapuram is one of the old villages situated in Kilinochchi district. Uruthirapuram Community Centre and Sports Club (called as Uruthirapuram Sports Club (USC)) was found in early 1957s. It is contributing community in many ways to develop skills, education and empower youngsters.


உருத்திரபுரத்தில் 1952 இல் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்த வாலிபர் சங்கம் 1957ம் ஆண்டு உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் என்ற பெயருடன் செயற்படத் தொடங்கியது.

உருத்திரபுரம் கிராமத்து இளையவர்களின் கல்வி, கலை, விளையாட்டு மற்றும் பிற திறமைகளை வளர்த்தெடுப்பதில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் பலவழிகளில் செல்வாக்குச் செலுத்துகிறது.  
__________________________________________________________

Year - 2010


  

The most recent flag and logo created by Mr Manikkavasakar Kuruparan in 2010. After the war, Uruthirapuram was resettled on early 2010 and Sports Club restructured.  

கழகத்தின் தற்போதைய கொடி மற்றும் இலட்சனை திரு மாணிக்கவாசகர் குருபரன் அவர்களால் 2010 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

போரால் சிதைவுற்றிருந்த கிராமம் 2010 இல் மீள குடியமர அனுமதிக்கப்பட்டது. அந்த வருடமே உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் மீள கட்டமைக்கப்பட்டு போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. 
_______________________________________________________

Year - 2013



Construction of boundary wall was started on 2013  with help of Uruthirapuram Sports Club members and Well-wishers. Target to complete by 2019

உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் சுற்றுமதில் அமைக்கும் வேலைத்திட்டம் 2013 களில் ஆரம்பிக்கப்பட்டது. கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்பில் நடைபெற்றுவரும் இந்த வேலைத்திட்டமானது 2019ம் ஆண்டளவில் நிறைவுபெறும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
__________________________________________________________

Year - 2018



Nallamma Stadium was built and donated by Late Mrs Nallamma's Family on 17 February 2018. It was Opened by Family members   

நல்லம்மா பார்வையாளர் அரங்கானது கழக உறுப்பினர் அமரர் நல்லம்மா குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் கட்டப்பட்டு உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்திற்கு 2018ம் ஆண்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்த அரங்கானது  ஆல் திறக்கப்பட்டது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் பார்வையாளர் அரங்குடன் காணப்படும் முதலாவது விளையாட்டு மைதானம் உருத்திரபுரம் விளையாட்டு மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

  
__________________________________________________________

Year - 2018



Arathy viewing shelter was donated by Mr Ranjith on 2018

ஆரதி பார்வையாளர் அரங்கானது கழக உறுப்பினர் திரு ரஞ்சித் அவர்களின் நிதிப் பங்களிப்பில் கட்டப்பட்டு உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்திற்கு 2018இல் அன்பளிப்பு செய்யப்பட்டது.