உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Uruthirapuram SC Memorial Cup | Best Player

This statue created by Uruthirapuram SC member Mr Iynkaran for Best Player of the tournament

Uruthirapuram SC Memorial Cup | Winner

This Hand Made Statue created by Uruthirapuram SC member Mr Iykaran for Winner

Uruthirapuram SC Memorial Cup | Best Goalkeeper

This Hand Made Statue Created by Mr Iynkaran for Best Goalkeeper of the Tournament

WE LOVE SPORTS | WE RESPECT GAMES

Creat Peace Throught the Love and Sports

WE CELEBRATE TOGETHER

Players, Fans and Well-Wishers at Uruthirapuram Sports Club Ground

Monday, March 25, 2019

எம் கிராமம் - பணி 03 | 16-03-2019.

உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் "எம் கிராமம்" திட்டத்தின் 3வது சிரமதானப்பணி 16-03-2019 மாலை 3 மணியளவில் அருள்மிகு பொறிக்கடவை அம்மன் கோயிலில் இடம்பெற்றது.
இந்த சமூகப் பணியில் பங்கெடுத்த கழக உறுப்பினர்கள் ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
- உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்-































Share:

Padaiya Trophy 2019 | படையப்பா கிண்ணம் 2019 - அனுராதபுரம்



Uruthirapuram Sports Club participated All Island 7 a side Open Football Tournament “Padaiya Trophy 2019” organized by Padaiyappa Sports Club, Anuradhapura on 22, 23 and 24 March 2019 at Public Play Ground, Nachchuduwa, Anuradhapura. This is the first time Uruthirapuram Sports Club participate an unofficial football tournament outside the Northern Province. (Uruthirapuram Sports Club played official matches [FA Cup] outside the Northern Province)

Uruthirapuram Sports Club defeated Trincomalee Nova FC, Anuradhapura Kasthuri FC, Troncomalee Kinniya FC and met Mullipothana Solid FC at quarter-final match. In the semi final Uruthirapuram S.C Vs Mullipothana Solid FC full time 00:00 and Mullipothana FC defeated Uruthirapuram SC in penalty shootout by 03:02.
It was northworthy that Mullipothana FC won the final Champion Trophy.
We wish all our players and thanks our supports. 

Also we wish Mullipothana Solid FC for the championship.

அகில இலங்கை ரீதியில் அனுராதபுரத்தில் நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான "படையப்பா கிண்ணம் 2019" போட்டியில் காலிறுதிவரை முன்னேறிய உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் அணி, காலிறுதியில் முள்ளிப்பொத்தானை சொலிட் அணியுடன் பனால்டி உதையில் துரதிஸ்டவசமாக தோல்வியுற்று வெளியேறியது.

வடமாகாணத்திற்கு வெளியே சென்று உத்தியோகபூர்வமற்ற உதைபந்தாட்ட சுற்றுத்தொடரில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் பங்குபற்றிய முதலாவது போட்டித் தொடர் இது. (இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்படும் உத்தியோகபூர்வ FA Cup போட்களுக்காக ஏற்கனவே வடமாகாணத்திற்கு வெளியே உருத்திரபுரம் வி.க பங்குபற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது)
படையப்பா விளையாட்டுக்கழகத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்படும் இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட கழகங்கள், டயலொக் சம்பியன் லீக் விளையாடும் வீரர்களைக் கொண்ட கழகங்கள் என பல கழகங்கள் பங்குபற்றிய இந்த தொடரானது மார்ச் 22,23,24 ம் திகதிகளில் இரவு பகலாக நடைபெற்றிருந்தது.
25ம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் முள்ளிப்பொத்தான சொலிட் அணியுடன் மோதிய உருத்திரபுரம் அணி, போட்டியின் முழு நேர முடிவில் இரு அணிகளும் எந்தவொரு கோலையும் போடாத நிலையில் பனால்டி உதை மூலம் 02:03 என்ற அடிப்படையில் முள்ளிப்பொத்தான சொலிட் அணி வெற்றி பெற்றது.

பனால்டி உதை மூலம் உருத்திரபுரம் அணியினை வென்ற முள்ளிப்பொத்தான அணி தான் "படையப்பா கிண்ணம் 2019" இனை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரவு பகலாக இடம்பெற்ற இந்த தொடரில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலும் பங்கு பற்றி திறமையை வெளிப்படுத்தி காலிறுதி வரை முன்னேறிய எமது வீரர்களும் ஆதரவு வழவங்கிய அனைவருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இந்த போட்டியில் கிண்ணத்தை சுவீகரித்த அனுராதபுரம் முள்ளிப்பொத்தான அணியினருக்கு எமது வாழ்த்துக்கள்.
- Uruthirapuram Sports Club Media Team -
Share:

AGA Meet 2019 - Uruthirapuram S.C Results


Share:

Thursday, March 14, 2019

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனின் பொய்யான தகவல் தொடர்பான கண்டன அறிக்கை




14-03-2019
உருத்திரபுரம் விளையாட்டுக்கழகமானது கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னணி விளையாட்டுக்கழகமாக திகழ்வதோடு மட்டுமல்லாது வடமாகாணத்தில் சிறந்த உதைபந்தாட்ட அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. கழக வீரர்கள், கிராம மக்கள் மற்றும் நலன்விரும்பிகளின், பெரும் ஆதரவோடு உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் தமக்கான கட்டுமானங்களை உருவாக்கி, விளையாட்டில் மட்டுமல்லாது கிராமிய சமூக வேலைத்திட்டங்களிலும் பங்கெடுத்துவருகின்றது.

சிறிலங்கா Roll Ball தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டு இந்த வருடம் பெப்ரவரி மாதம் இந்தியா கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற்ற பன்னாட்டு போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்புப் பெற்ற உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீராங்கனைகள் செல்வி சோபிகா மற்றும் செல்வி வினுசா ஆகியோருக்கு உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் 18-02-2019 ஆம் திகதியன்று கௌரவிப்பு நிகழ்வொன்றையும், நிகழ்வில் சிறிய ஊக்கத் தொகையொன்றினையும் வழங்கியிருந்தது.

குறிப்பிட்ட நிகழ்விற்கு கழக உறுப்பினர்கள், வீராங்கனைகளின்; பெற்றோர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு பசுபதிப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.  இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்களால் வழங்கப்பட்டதாக உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்திற்கு கிடைக்கப்பெற்ற தலா ஐம்பதாயிரம் ரூபா நிதியினை குறிப்பிட்ட வீராங்கனைகளுக்கு வழங்கியது மட்டுமல்லாது உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர் திரு ரஞ்சித் அவர்களால் வழங்கப்பட்ட தலா பத்தாயிரம் ரூபா நிதியும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட கௌரவிப்பு நிகழ்வு தொடர்பான முழுமையான செய்தியானது எமது விளையாட்டுக்கழக உத்தியோகபூர்வ முகநூல் (https://www.facebook.com/pg/Uruthirapuramsportsclub/photos/?tab=album&album_id=1921001264693043) மற்றும் வலைத்தளத்தில் (https://kiliusc.blogspot.com/2019/02/roll-ball.html) அன்றே (18-02-2019) வெளியிடப்பட்டிருந்தது.

மேற்படி நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை. இப்படியிருக்க, ஊடகவியலாளர் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது முகநூலில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்கள் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் அவரின்; கையாலேயே ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதாகும்.

குறிப்பிட்ட வீராங்கனைகளுக்கென்று வழங்கப்பட்ட நிதியை, உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்திற்கு சொல்லப்பட்ட நிதி மூலத்தை மேற்கோள் காட்டியே உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் வழங்கியிருந்த நிலையில், திரு தமிழ்ச்செல்வன் தனது தனிப்பட்ட அரசியல் நலன்களிற்காக உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தை தொடர்புபடுத்தி வெளியிட்டிருக்கும் பொய்யான செய்தி மிகுந்த வருத்தத்தையளிப்பதோடு குறிப்பிட்ட ஊடகவியலாளரின் நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுகிறது.

உருத்திரபும் விளையாட்டுக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிடாமல் தான்தோன்றித்தனமாக பொய்யான தகவல்களை தனது அரசியல் தேவைகளுக்காக வெளியிட்டிருக்கும் ஊடகவியலாளர் திரு தமிழ்ச்செல்வனுக்கு  எமது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம், கிளிநொச்சி

Share:

Monday, March 11, 2019

AGA Meet 2019 | Athletics


Uruthirapuram Sports club participated most of Track and field events at Karaichchi A.G.A Division's annual sports meet 2019 on 10 March . The date of Final event to be advised. 

We Wishing our athletes and coaches good luck in the upcoming final event. And also we than our supports. 

கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான 2019 விளையாட்டுப் போட்டியின் தடகள விளையாட்டுக்களில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழ வீர வீராங்கனைகள் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருக்கின்றனர். வெற்றியீட்டிய வீரர்களுக்கும் அணிகளை ஒழுங்கு செய்த வீரர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் ஆதரவு வழங்கிய ஆதரவாளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். - 


Uruthirapuram S C Media Team -
Share:

2019ம் ஆண்டின் நான்காவது வெற்றிக் கிண்ணம்


இன்று 09-03-2019 உருத்திரபுரம் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற, கரைச்சி இளைஞர் கழக 2019ம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் வெற்றிவாகை சூடியது.

👉 2019ம் ஆண்டில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் 4வது வெற்றிக் கிண்ணம் இதுவாகும்.
இதுவரையில்,

⚽️ 20 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான பொங்கல் கிண்ணம்,
⚽️ கரைச்சி பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி 2019,
⚽️ வன்னிஉதைபந்தாட்ட சமர் 2019 (கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய அணிகள்)
மற்றும்
⚽️ கரைச்சி இளைஞர் கழக உதைபந்தாட்ட போட்டி 2019 போன்ற நான்கு வகையான போட்டிகளிலும் உருத்திரபுரம் அணியினர் தமது வெற்றிகளை பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

❤️ வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், பங்கெடுத்த ஆதரவாளர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
-உருத்திரபுரம் வி.க ஊடக அணி-
Share:

Tuesday, February 26, 2019

நூல் அன்பளிப்பும் அங்கத்தவர் இணைப்பும்.

"நூல் அன்பளிப்பும் அங்கத்தவர் இணைப்பும்" நிகழ்வு 25-02-2019 திங்கட்கிழமை உருத்திபுரம் விளையாட்டுக்கழக சனசமூக நிலையத்தில், உருத்திரபுரம் சனசமூக நிலையத் தலைவர் திரு.இ.கேசவன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறிதரன், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் திரு.த.குருகுலராஜா, ஓய்வு பெற்ற அதிபர் திரு. ச.மு.அருளம்பலம், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் கௌரவ சு.வேழமாலிகிதன், அ.சத்தியானந்தன் (கௌரவ பிரதேசசபை உறுப்பினர்) கமலம் ஊக்குவிப்பு மையம், கண்டாவளைப் பிரதேச கிராம அலுவலர் திரு. அ. சிம்சன் போல், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அ.சசிக்குமார், சனசமூக நிலைய ஆரம்பகால நிர்வாக உறுப்பினர் திரு.ஆ.நீலாம்பாள் உட்பட சிறுவர்கள், இளையோர், பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பின்வரும் சமூக ஆர்வலர்களால் நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

1) அமரர் மருத்துவமாமணி ச.மு கோபாலப்பிள்ளை நினைவாக குடும்பத்தினர்
2) திரு. ச.மு.அருளம்பலம் (ஒய்வு நிலை அதிபர், உருத்திரபுரம்)
3) திரு.கந்தையா விக்கினேஸ்வரன் (கிருபா கனடா) (சிவா, கவின், கலா நினைவாக)
4) அ.சத்தியானந்தன் (கௌரவ பிரதேசசபை உறுப்பினர்) கமலம் ஊக்குவிப்பு மையம்
5) திரு. ஞானம் இந்திரா (பிரான்ஸ்)

வாசிப்பின் முக்கியத்துவத்தையும், வாசிப்பு எவ்வாறு சமூகத்தை நல்வழிப்படுத்துகிறது என்பதையும் விளக்கி அதன்பால் எமது இளைய சமூகத்தை உள்வாங்கவும் நடைபெற்ற இந்த நிகழ்வை மிகவும் சிறப்புற நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அமது நன்றிகள்.

[Editing and reproducing images of this album for commercial and other purposes without the permission of owner is prohibited and is considered as a copyrights violation.] Photographed By : Mâhî Màhiñťhañ Uruthirapuram Sports Club - All Rights Reserved -

- உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் -































































Share: