உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Thursday, February 21, 2019

ROLL BALL தேசிய அணியில் உருத்திரபுரம் வி.க வீராங்கனைகள்


18-02-2019
சிறிலங்கா ROLL BALL தேசிய அணியில் ந.வினுசா மற்றும் தி.சோபிகா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்தியா கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற உள்ள அனைத்துலக போட்டித் தொடரொன்றில் பங்குபற்றவும் உள்ளனர்.
தேசிய அணியில் இடம் பெற்றுள்ள எமது வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு உருத்திரபுரம் விளையாட்டுக்கழக மைதானத்தில் கழக தலைவர் திரு றமாகரன் தலைமையில் இன்று இடம் பெற்றது.
கழக வீராங்கனைகளை கௌரவிக்கும் இந்த நிகழ்வில் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முகமாக கழக வீரர் கு.ரஞ்சித் அவர்களால் தலா 10,000 ரூபாய்களும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் (https://www.facebook.com/ShritharanOfficial/) அவர்களால் தலா 50,000 ரூபாய்களும் வழங்கப்பட்டன.
இந்த கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உட்பட கழக உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.
தேசிய அணியில் இடம் பெற்றிருக்கும் எமது வீராங்கனைகள் மேலும் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்.
உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்
கிளிநொச்சி

_________________________________
Uruthirapuram Sports Club players Ms T.Sopika and Ms N.Vinusha selected for Sri Lankan Roll Ball National team. They are going to participate a tournament in Karnataka, India.
The players are honored by Uruthirapuram Sports Club today at USC play ground. Local politicians, USC members and well wishers participated in the event.
Parliament member Mr Sritharan and USC member Mr Ranjith offered a cash prize for players.
Share: