உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Monday, March 25, 2019

Padaiya Trophy 2019 | படையப்பா கிண்ணம் 2019 - அனுராதபுரம்



Uruthirapuram Sports Club participated All Island 7 a side Open Football Tournament “Padaiya Trophy 2019” organized by Padaiyappa Sports Club, Anuradhapura on 22, 23 and 24 March 2019 at Public Play Ground, Nachchuduwa, Anuradhapura. This is the first time Uruthirapuram Sports Club participate an unofficial football tournament outside the Northern Province. (Uruthirapuram Sports Club played official matches [FA Cup] outside the Northern Province)

Uruthirapuram Sports Club defeated Trincomalee Nova FC, Anuradhapura Kasthuri FC, Troncomalee Kinniya FC and met Mullipothana Solid FC at quarter-final match. In the semi final Uruthirapuram S.C Vs Mullipothana Solid FC full time 00:00 and Mullipothana FC defeated Uruthirapuram SC in penalty shootout by 03:02.
It was northworthy that Mullipothana FC won the final Champion Trophy.
We wish all our players and thanks our supports. 

Also we wish Mullipothana Solid FC for the championship.

அகில இலங்கை ரீதியில் அனுராதபுரத்தில் நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான "படையப்பா கிண்ணம் 2019" போட்டியில் காலிறுதிவரை முன்னேறிய உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் அணி, காலிறுதியில் முள்ளிப்பொத்தானை சொலிட் அணியுடன் பனால்டி உதையில் துரதிஸ்டவசமாக தோல்வியுற்று வெளியேறியது.

வடமாகாணத்திற்கு வெளியே சென்று உத்தியோகபூர்வமற்ற உதைபந்தாட்ட சுற்றுத்தொடரில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் பங்குபற்றிய முதலாவது போட்டித் தொடர் இது. (இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்படும் உத்தியோகபூர்வ FA Cup போட்களுக்காக ஏற்கனவே வடமாகாணத்திற்கு வெளியே உருத்திரபுரம் வி.க பங்குபற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது)
படையப்பா விளையாட்டுக்கழகத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்படும் இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட கழகங்கள், டயலொக் சம்பியன் லீக் விளையாடும் வீரர்களைக் கொண்ட கழகங்கள் என பல கழகங்கள் பங்குபற்றிய இந்த தொடரானது மார்ச் 22,23,24 ம் திகதிகளில் இரவு பகலாக நடைபெற்றிருந்தது.
25ம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் முள்ளிப்பொத்தான சொலிட் அணியுடன் மோதிய உருத்திரபுரம் அணி, போட்டியின் முழு நேர முடிவில் இரு அணிகளும் எந்தவொரு கோலையும் போடாத நிலையில் பனால்டி உதை மூலம் 02:03 என்ற அடிப்படையில் முள்ளிப்பொத்தான சொலிட் அணி வெற்றி பெற்றது.

பனால்டி உதை மூலம் உருத்திரபுரம் அணியினை வென்ற முள்ளிப்பொத்தான அணி தான் "படையப்பா கிண்ணம் 2019" இனை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரவு பகலாக இடம்பெற்ற இந்த தொடரில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலும் பங்கு பற்றி திறமையை வெளிப்படுத்தி காலிறுதி வரை முன்னேறிய எமது வீரர்களும் ஆதரவு வழவங்கிய அனைவருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இந்த போட்டியில் கிண்ணத்தை சுவீகரித்த அனுராதபுரம் முள்ளிப்பொத்தான அணியினருக்கு எமது வாழ்த்துக்கள்.
- Uruthirapuram Sports Club Media Team -
Share: