உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Thursday, January 24, 2019

எம் கிராமம்


உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் "எம் கிராமம்" திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

கடமை: எமது கிராமமான உருத்திரபுரத்தில் சமூகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியதும் அதற்கு இளையோர் மற்றும் பெரியவர்களை ஒழுங்கு செய்ய வேண்டியதும் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் கடமையாகும். 

நோக்கம்: முதற்கட்டமாக, ஒவ்வொரு மாதமும் உருத்திரபுரம் கிராமத்தில் உள்ள பொது இடங்களில் சிரமாதானப்பணிகளை மேற்கொள்ளல். 

சிரமதான இடங்களை தெரிவு செய்தல்: சிரமதானம் செய்ய வேண்டிய இடங்களை கிராமத்தில் உள்ள யாரும் தெரிவு செய்து அதை நேரடியாக உருத்திரபுரம் விளையாட்டுக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கலாம். அதை கழகம் ஆய்வு செய்து சிரமதான பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யும்.


*                                     *                                        *                                 *

சிரமதானம் 1 : 26 தை 2019 (சனிக்கிழமை) மாலை 3 மணி, 4ம் குறுக்கு 
Share: