உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Sunday, February 10, 2019

உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் மகத்தான சாதனை | AGA Meet 2019


கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 2019 ஆண்டிற்கான உதைபந்தாட்ட போட்டியில் வெற்றிவாகை சூடியதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 6வது வருடமாகவும் கசைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியின் வெற்றியாளர்களாக தங்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்.
* * * *
2013ம் ஆண்டில் தொடங்கிய இந்த வெற்றிப் பயணத்தில் பல இளம் வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ள உருத்திரபும் விளையாட்டுக்கழகம் இந்தவருடம் 16 வயதே நிரம்பிய சுதர்சன் அவர்களை உருத்திரபுரம் விளையாட்டுக்கழக பிரதான அணி வீரராக அறிமுகப்படுத்தியிருக்கிறது. உருத்திரபுரம் விளையாட்டுக்கழக 22 வயதிற்குட்பட்டோர் அணியின் வீரரான சுதர்சன் இந்த வருட பொங்கல் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு பக்கபலமாக இருந்தததோடு இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தவிர உருத்திரபுரம் மகாவித்தியாலயம் நடாத்திய "அமரர் சந்திரகாந்தன் கமலாவதி ஞாபகார்த்த சுற்றுத் தொடரிலும்" சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
* * * *
கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழக அணிகளுக்கிடையிலான 2019ம் ஆண்டிற்கான உதைபந்தாட்டப் போட்டியின் இன்றயதினம் அரையிறுதிப் போட்டிகள் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகின முதலாவது அரையிறுதியில் கடந்த வருடம் இறுதிப் போட்டி வரை முன்னேறிய உதயதாரகை அணியினை எதிர் கொண்டது கனகபுரம் அணி இப் போட்டியில் கனகபுரம் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மீள்குடியமர்வின் பின்னர் முதல் தடவையாக இவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது..
    
2019 போட்டி விபரம்
காலிறுதிப்போட்டியில் வட்டக்கச்சி லக்கி ஸ்டார் அணியை எதிர்கொண்ட உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
ஹரீசன் - 3
தேனுசன் - 1

    
அரையிறுப்போட்டியில் வட்டக்கச்சி இளந்தளிர் அணி போட்டியில் பங்கெடுக்காமையால் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.
    
கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழக அணிகளுக்கிடையிலான 2019ம் ஆண்டிற்கான உதைபந்தாட்டப் போட்டியின் கிண்ணத்தினை வெல்லப் போகும் அணி எது என்பதற்கான மாபெரும் இறுதிப் போட்டி இன்றையதினம் 4.00 மணியளவில் உருத்திரபுரம் விளையாடுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது தொடர்ச்சியாக ஆறாவது தடவையும் கிண்ணத்தினை வெல்லும் நோக்குடன் உருத்திரபுரம் அணியும், மீள் குடியமர்வின் பின் முதல் தடவையாக கிண்ணம் வெல்லும் நோக்குடன் கனகபுரம் அணியும் ஒன்றுக்கொன்று சம பலத்துடன் மோதியது மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணியினரும் கோல் போடுவதற்கு பல முயற்சிகளினை மேற்கொண்டபோதும் இரு அணியின் பின்கள வீரர்களினால் முறியடிகப்பட முதல் பாதி கோல் எதுவும் இன்றி நிறைவடைந்தது.
தொடர்ந்து ஆரம்பமாகிய இரண்டாவது பாதியில் வேகம் கொண்ட கனகபுரம் அணியினர் போட்டியின் 38 வது நிமிடத்தில் உருத்திரபுரம் அணியின் பின்கள வீரர்களினை ஊடறுத்து முதலாவது கோலினைப் போட்டு தமது கோல் கணக்கினை ஆரம்பித்தனர்.தொடர்ந்து தங்களினை சுதாகரித்துக் கொண்டு வேகம் கொண்ட உருத்திரபுரம் அணியினர் போட்டியின் 44 வது நிமிடத்தில் மிக அனுபவ வீரர் பத்மகுமாரினால் போடப்பட்ட கோலின் உதவியுடன் கோல் கணக்கினை சமப்படுத்தினர் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்து இருந்த உருத்திரபுரம் அணியினர் போட்டியின் 58 வது நிமிடத்தில் கிடைத்த பனல்டி வாய்ப்பினை ஹரீஸ் அவர்கள் கோலாக மாற்ற உருத்திரபுரம் அணி ஆறாவது தடவையாக கிண்ணத்தினை வென்று வரலாற்று சாதனை படைத்தது. 
பத்மகுமார் - 1
ஹரீஸ் - 1

______________________________________________
இந்த தொடரில் மொத்தமாக பெறப்பட்ட கோல்கள்
ஹரீசன் 4
தேனுசன் 1
பத்மகுமார் 1
___________________________________________
உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் போட்டிகளில் பங்கெடுத்து ஊக்கப்படுத்திய ஆதரவாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எமது நன்றிகள்.
உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் சாதனைப்பயணத்தில் பங்கெடுத்த வீரர்கள், முகாமையாளர், பயிற்சியாளர்களுக்கு எமது நன்றிகள்.
- USC Media Team -
Share: