உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Monday, January 14, 2019

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசியர் சங்கம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்று போட்டி 2018~2019 | யாழ்ப்பாணம்



6 January 2019

அரையிறுதியில் நடுவரின் குழப்பகரமான செயற்பாடுகளால் போட்டியிலிருந்து இடை விலகியது உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம். 

போட்டி முடிய 10 நிமிடங்கள் இருந்த வேளையில் உருத்திரபுரம் அணி றோயல் அணியக்கு எதிராக 2 கோலகளை பதிவு செய்திருந்தது. 

உருத்திரபுரம் றோயல் 2:3

உருத்திரபுரம் சார்பாக

ஹரீஸ் 1
தேனு 1


3 January 2019

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசியர் சங்கம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்று போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் தெல்லிப்பளை நாமகள் அணியினை எதிர் கொண்டது உருத்திரபுரம் அணி.
இவ் ஆட்டத்தில் 07:01 என்ற கோல் கணக்கில் உருத்திரபுரம் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இப் போட்டியில் உருத்திரபுரம் அணி சார்பாக ஹரிஷ், பிரதீஸ் தலா மூன்று கோல்களையும்,சாந்தன் ஒரு கோலினையும் பெற்று உருத்திரபுரம் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
வெற்றிக்காக உழைத்த வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.


2 January 2019

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசியர் சங்கம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்று போட்டியில் இன்று நடைபெற்ற A பிரிவிக்கான ஆட்டத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் அணியை உரெழு ரோயல் அணி மோதியது.
இவ் ஆட்டத்தில் 02:01 என்ற கோல் கணக்கில் உருத்திரபுரம் அணி தோல்வி பெற்று லீக் சுற்றில் ஓர் வெற்றி ஒரு தோல்வி என குழு A யில் இரண்டாம் இடத்தினைப் பெற்று காலிறுதிக்கு செல்கிறது.......
காலிறுதியில் நாளையதினம் மாலை 5.00 க்கு நாமகல் அணியினை எதிர் கொள்ளவுள்ளது.......
வெற்றிக்காக உழைத்த வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்....


30 December 2018
வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசியர் சங்கம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்று போட்டியில் இன்று நடைபெற்ற A பிரிவிக்கான ஆட்டத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் அணியை எதிர்த்து அராலி பாரதி அணி மோதியது.
இவ் ஆட்டத்தில் 10:01 என்ற கோல் கணக்கில் உருத்திரபுரம் அணி வெற்றி பெற்று லீக் சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
உருத்திரபுரம் அணி சார்பாக ஹரீஸ் 06,தேனுஜன், பவுசிகன், பிரதீஸ் , கிசாந்தன் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்........
இத் தொடரின் மற்றைய போட்டியில் 02:01:2019 (புதன்கிழமை) அன்று உருத்திரபுரம் அணி ஊரெழு ரோயல் அணியினை எதிர் கொள்ளவுள்ளது.......
வெற்றிக்காக உழைத்த வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்......
Share: