உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Monday, January 14, 2019

அரையிறுதி போட்டியின் இடையில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் விலகியது தொடர்பானது | யாழ்ப்பாணம்


6 January 2019

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் நடாத்தும் அழைக்கப்பட்ட 12 அணிகளுக்கிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 05-01-2019 சனிக்கிழமை மாலை 04:00 மணியளவில் உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் முதலாவது அரையிறுதிப் போட்டி இடம்பெற்றது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கிசாந்தன் தலைமையிலான கிளிநொச்சி உருத்திரபுரம் எதிர்த்து கஜேந்தன் தலைமையிலான ஊரெழு றோயல் மோதியது. இந்தப் போட்டியானது நடுவரின் நேர்மையற்ற பல தீர்ப்புகளால் இறுதியில் உருத்திரபுரம் அணி போட்டியில் இருந்து விலகும் முடிவினை எடுக்கும் அளவிற்கு சென்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னிலை வகிக்கும், இந்த தொடரில் இதுவரையில் எதிரணிகளுக்கு எதிராக அதிகளவு கோல்களை பதிவு செய்த அணி உருத்திரபுரம் அணி திறமையான யாழ் ஊரெழு றோயல் அணியினை அரையிறுதிப் போட்டியில் சந்திப்பது மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த போட்டிக்கு அனுபவமற்ற நடுவரை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நியமித்திருந்தார்களா என்ற சந்தேகம் வருமளவிற்கு மத்தியஸ்தம் நடைபெற்றிருந்தது வருத்தமளிக்கிறது. பக்கச்சார்பான அல்லது நேர்மையற்ற நடுவர் தீர்ப்புகளால் தொடர்ச்சியாக விளையாட முடியாது போட்டியில் இருந்து விலக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் தள்ளப்பட்டிருந்து.
இந்த போட்டியை பொறுத்தவரை, 25வது நிமிடத்தில் வழங்கப்பட்ட பனால்டி உதையானது (Penalty kick) நடுவரின் பக்கச்சார்பான தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது. கீப்பரால் தட்டிவிடப்பட்ட பந்தை அடிக்க முற்பட்ட எதிரணி வீரர் சறுக்கி விழுந்த நிலையில் குறித்த வீரரால் நடுவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு அது பனால்டியாக (Penalty kick) நடுவரால் அறிவிக்கப்பட்டது. சாதரணமாக இப்படிப்பட்ட தண்டனை உதைகள் (பனால்டி) கொடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது நடுவர் உடனடியாக விசில் ஊதி கார்ட் காட்ட வேண்டும் அல்லது இதர நடுவர்களோடு ஆலாசித்து தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர எதிரணியினர் வேண்டுகோள் விடுத்து அதன் பின்னர் தீர்ப்பு வழங்குவது நேர்மையானதாக அமையாது. அதுவும் எதிரணிக்கு கோல் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் இப்படியான நேர்மையற்ற செயற்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும். குறித்த சம்பவம் தொடர்பில் போட்டியின் நடுவே கருத்து மோதல்களை உருவாக்காமல் உருத்திரபுரம் அணித்தலைவர் கிசாந்த இடைவேளையின் போது தமது அதிருப்தியை நடுவரிடம் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து 34வது நிமிடத்தில் உருத்திரபுரம் அணி Defend பகுதியில் நின்ற பிரதீசை எதிரணி வீரர் மோதி தள்ளிய போது அதை விதி மீறலாக அறிவித்து விசில் ஊதிய நடுவர், பிரதீஸ் மற்றும் எதிரணி வீரருக்கு மச்சள் அட்டையை காட்டியது மாத்திரமின்றி அது எதிரணிக்கு Direct free kick ஆகவும் அறிவித்தார் இது அப்பட்டமான பக்கச்சார்பு முடிவு என்பது தெரிந்து எதிர்ப்புக் கிளம்ப, தனது முடிவை மாற்றி Dropped ball ஆக அறிவித்தார் நடுவர் . அதாவது இரண்டு வீரர்களும் சம அளவிலான விதி மீறல்களை செய்திருக்கிறார்கள் என்பது அர்த்தம். ஒரு அரையிறுதிப் போட்டியில் சரியான, உறுதியான முடிவினை எடுக்கத் தெரியாத நடுவரை வடமாகாண உடற்கல்வி டிப்னோமா ஆசிரியர் சங்கம் நியமித்திருந்தமை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
47 வது நிமிடத்தில் கிசாந்தனால் கீப்பரை நோக்க தள்ளப்பட்ட பந்து கீப்பரின் காலை உரசியபடி கோல் கம்பத்தை நோக்கி சென்று கோல் கம்பத்தில் பட்டுத் தெறித்து மீண்டும் மைதானத்திற்குள் வந்த வேளை அந்தப் பந்து கோல் காப்பாளரால் பிடிக்கப்பட்டிருந்து. கீப்பரால் பிடிக்கப்பட்ட பந்து மீண்டும் மற்றொரு வீரரிடம் பரிமாறப்பட்ட பின்னர் எதிரணியின் முறைப்பாட்டினைத் தொடர்ந்து விசில் ஊதி Direct free kick ஆக நடுவர் அறிவித்திருந்தார். உருத்திரபுரம் விளையாட்டுக்கழக முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பந்து, கோல் கீப்பர் கஜானந்தின் காலில் உரசிச் செல்வது தெரிகிறது. ஆனாலும் வீடியோவின் தரம் குறைவாக இருப்பதால், நாங்கள் அந்த கோணத்தில் விவாதிப்பதை தவிர்த்து உதைபந்தாட்ட விதிகளின் அடிப்படையில் நடுவர் முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. 
கோல் கீப்பர் நேரடியாக கையால்தான் பிடித்திருந்தால் உடனடியாகவே நடுவர் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் எதிரணியின் கோரிக்கைக்கு பின்னர் Direct free kick ஆக அறிவித்தமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தவிர உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் அதிருப்தியை வெளிடமுன்னர் இடம்பெற்ற சம்பவங்களை பார்க்கும் போது நடுவர் போதிய அனுபவம் இல்லாதவர் என்றே தெரிகிறது. Direct free kick இன் பொது எதிரணியினர் 10yr தூரத்தில் நிற்க வேண்டும். எனவே Goal Box ற்குள் Direct free kick வந்தால் எதிரணி வீரர்கள் நிற்பதற்கு ஏதுவாக பந்தானது 10yd தூரத்திற்கு பின்னகர்த்தியே உதைக்கப்படல் வேண்டும். ஆனால் விசில் ஊதிய நடுவர் பந்தை கோல் கம்பத்தில் இருந்து 4 அடி தூரத்தில் வைத்தே உதை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பது வீடியோவில் மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அது போக இன்னமும் சில நடுவர் தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
தவிர ஒரே அணி வீரரால் தள்ளப்பட்ட பந்து கோல் கம்பத்தில் தெறித்து திரும்பும் போது அதை கோல் கீப்பர் கையால் பிடிக்க முடியுமா முடியாதா என்பது குறித்தான தெளிவின்மை பலரிடம் காணப்படுகிறது. இப்படியான சந்தர்ப்பங்கள் தொடர்பில் இந்த தொடரில் எவ்வகையான விதிமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும் என்பது அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
மிக முக்கியமான போட்டியில் மிக மோசமான மத்தியஸ்தம் செய்யப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும். மிக மோசமான நடுவர் தீர்ப்புகளால் போட்டிகள் சலிப்புத்தன்மையை ஏற்படுத்துவதோடு ஆரோக்கியமான போட்டிகள் இடம்பெறுவதும், வீரர்களின் திறமைகள் வெளிப்படுவதும் தடுக்கப்படும்.
இந்தப் போட்டியில் நடுவராக பணியான்றியவரின் ஆளுமை குறித்து சம்மந்தப்பட்ட தரப்புகள் விசாரணை செய்யவதாயின் எமது முகநூல் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள காணொளிகளை பார்வையிடலாம்.
(இது தொடர்பான மூன்று காணொளிகள் தனித்தனியாக எமது முகநூல் பக்கத்திலும் வலைத்தளத்திலும் இணைக்கப்படும்)
-USC Media Team-
Share: