உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Monday, January 14, 2019

பொங்கல் கிண்ணம் - 2019 | வட்டக்கச்சி இளம்தளிர்



15 January 2019



#பொங்கல்_கிண்ணம்_உருத்திரபுரம்_அணி_வசம்.

🏆🏆🏆🏆🏆🏆
⚽⚽⚽⚽⚽

வட்டக்கச்சி இளம்தளிர் விளையாட்டுக்கழகம் கரைச்சி லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களின் 22 வயதுக்குட்பட்ட வீரர்களை ஒருங்கிணைத்து நடாத்திய பொங்கல் கிண்ணம் மாபெரும் உதைபந்து சுற்றுப் போட்டியில் இன்றையதினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் உருத்திரபுரம் அணி உருத்திரபுரம் சந்திரோதயா அணியினை எதிர்த்து மோதியது.மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப் போட்டியில் தேனுசனினால் பெறப்பட்ட ஒரு கோலினால் உருத்திரபுரம் அணி 01:00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பொங்கல் கிண்ண மாபெரும் #இறுதிப்_போட்டியின்_நாயகர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

இவ் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக உருத்திரபுரம் அணியின் சுதர்சன் அவர்களும் 
இத் தொடரின் சிறந்த கோல்காப்பளராக சந்திரோதயா அணியின் சிந்துஜன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

⚽⚽⚽⚽⚽⚽


வெற்றிக்காக உழைத்த வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.


#தேனுஷன்_இரட்டைக்கோல்_மற்றும்_அபார_கோல்காப்பு_பொங்கல்_கிண்ண_இறுதியில்_உருத்திரபுரம்_அணி.

🏆🏆🏆🏆🏆🏆
⚽⚽⚽⚽⚽⚽

வடக்கச்சி இளம்தளிர் விளையாட்டுக்கழகம் கரைச்சி லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களின் 22 வயதுக்குட்பட்ட வீரர்களை ஒருங்கினைத்து நடாத்தும் பொங்கல் கிண்ணம் மாபெரும் உதைபந்து சுற்றுப் போட்டியில் இன்றையதினம் அரையிறுதியில் பங்கு கொண்ட உருத்திரபுரம் அணி வட்டக்கச்சி லக்கிஸ்ற்றார் அணியுடன் மோதியது. போட்டி 02:02 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிவடைய சமனிலைத் தவிர்ப்பு முறையில் 02:00 என உருத்திரபுரம் அணி வெற்றி பெற்று பொங்கல் கிண்ண மாபெரும்

இறுதிப்_போட்டியில் இன்று மாலை 4.30 மணியளவில் சந்திரோதயா அணியினை வட்டக்கச்சி இளம்தளிர் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

⚽⚽⚽⚽⚽⚽

இப் போட்டியில் உருத்திரபுரம் அணி சார்பாக 

தேனுஷன் இரண்டு அபராக் கோல்கலினையும் மற்றும் சமநிலை தவிர்ப்பின் போது மூன்று அபராக் கோல்காப்பபினையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது


13 January 2019

வட்டக்கச்சி இளம்தளிர் விளையாட்டுக்கழகம் கரைச்சி லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களின் 22 வயதுக்குட்பட்ட வீரர்களை ஒருங்கினைத்து நடாத்தும் பொங்கல் கிண்ணம் மாபெரும் உதைபந்து சுற்றுப் போட்டியில் இன்றையதினம் காலிறுதியில் பங்கு கொண்ட உருத்திரபுரம் அணி உதயநிலா அணியினை 05:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
உருத்திரபுரம் அணி சார்பாக
தேனு-01
நிசாந்தன்-01
லதுசன்-01
சுதர்சன்-01
தனு - 01
ஆகியோர் கோல்களினைப் பெற்றனர்.

வெற்றிக்காக உழைத்த வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பொங்கல் தினம் அன்று இடம்பெறும்.


#தேனுஷன்_அபாரம்_காலிறுதியில்_உருத்திரபுரம்.


வட்டக்கச்சி இளம்தளிர் விளையாட்டுக்கழகம் கரைச்சி லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களின் 22 வயதுக்குட்பட்ட வீரர்களை ஒருங்கினைத்து நடாத்தும் பொங்கல் கிண்ணம் மாபெரும் உதைபந்து சுற்றுப் போட்டியில் பங்கு கொண்ட உருத்திரபுரம் அணி சுடரொளி அணியினை 10:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.


உருத்திரபுரம் அணி சார்பாக 
தேனு-06
நிசாந்தன்-01
லதுசன்-01
சுதர்சன்-01
சஞ்சீவன்-01 ஆகியோர் கோல்களினைப் பெற்றனர்.



காலிறுதியில் உருத்திரபுரம் அணி உதயநிலா அணியினை இன்று மாலை 4.30 மணியளவில் வட்டக்கச்சி இளம்தளிர் மைதானத்தில் எதிர் கொள்ளவுள்ளது
Share: