உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Sunday, February 24, 2019

"வன்னி உதைபந்தாட்டச் சமர் 2019" வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்


வவுனியாவில் நடைபெற்ற வன்னிமாவட்ட (கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்) தெரிவு செய்யப்பட்ட 24 அணிகளுக்கிடையிலான "வன்னி உதைபந்தாட்டச் சமர்" தொடரின் வெற்றிக்கிண்ணத்தை தன்வசமாக்கியது உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்.
இந்த வருடத்தில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் பெற்றுக் கொண்ட 3வது வெற்றிப் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________


களத்திலிருந்து
ஆற்றுப்டுத்தல் வன்னி உதைபந்தாட்டாச் சமர் 2019 வெள்ளி ,சனி,ஞாயிறு தினங்களில் வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,மன்னார் மாவட்டங்களை இணைத்து வவுனியா யங்ஸ்டார் மைதானத்தில் பகல்,இரவு ஆட்டாமாக இடம்பெற்ற இச் சுற்றுப் போட்டியில் மொத்தமாக 24 அணிகள் பங்குபற்றி 8 குழுக்களால் பிரிக்கப்பட்டு குழு நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளை கொண்டு மீண்டும் 16 அணிகளை தெரிவு செய்து விலகல் முறையிலான போட்டி இடம்பெற்று இறுதிப்போட்டி 24.02.2019(ஞாயிறு) இரவு 8.00 மணியளவில் ஆரம்பமாகியது. இச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட உருத்திரபுரம் அணி தாம் இடம் பிடித்த குழுவில் அணைத்துப் போட்டிகளிலும் வென்று குழு நிலையில் முதலாம் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது அடுத்த சுற்றில் "மன்னர் மடு St. Joshep" கழகத்தினை 1:0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதியில் "வவுனியா 786" அணியினை 1:0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டியில் "மன்னார் விடத்தல்தீவு யுனைற்ரட்" அணியினை 2:0 என்ற கோல் கணக்கில் வென்று மாபெரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 மாபெரும் இறுதிப் போட்டியில் "வவுனியா ஈஸ்வரன்" அணியினை எதிர் கொண்ட உருத்திரபுரம் அணி, இறுதிப் போட்டியின் விறுவிறுப்புக்கு எவ்வித பஞ்சமும் இல்லாமல் ஆரம்பமாகிய இறுதிப் போட்டியில் போட்டி ஆரம்பித்து 6 வது நிமிடத்தில் ஈஸ்வரன் அணியினருக்கு கிடைத்த சுயாதீன உதவியினை நேரடியாக கோல் கம்பத்தினை நோக்கி உதைக்க அது கோலாக மாற ஈஸ்வரன் அணி போட்டியில் முன்னிலை வகித்தது தொடர்ந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இடம்பெற்ற போட்டியில் உருத்திரபுரம் அணி போட்டியில் வேகத்தினை அதிகரித்து போடியினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போட்டியின் 12 வது நிமிடத்தில் உருத்திரபுரம் அணியினருக்கு கிடைத்த சுயாதீன உதவியினை நேரடியாக கோல் கம்பத்தினை நோக்கி அனுபவ வீரர் பிரதீஸ் உதைக்க அது கோலாக மாற உருத்திரபுரம் அணி போட்டியில் சமநிலையாக்கியது. தொடர்ந்து அதே வேகத்தில் உருத்திரபுரம் அணியின் நட்சத்திர வீரர் ஹரிஷன் அவர்களின் அபாரமான உதையின் மூலம் உருத்திரபுரம் அணி அடுத்த நிமிடமே இரண்டாவது கோலினை போட்டு போட்டியில் முன்னிலை வகித்தது. போட்டி இடைவேளைக்காக நிறுத்தப்படும்போது 2:1 என உருத்திரபுரம் அணி முன்னிலை வகித்தது தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாம் பாதியிலும் போடியினை தம் கட்டுப்பாட்டில் வைத்து இருத்த உருத்திரம் அணியின் இளம்புயல் தேனுஷனினால் தூரத்தில் இருந்து அபாரமாக உதைக்கப்பட்ட பந்து கோலாக மாற உருத்திரபுரம் அணியின் வெற்றி உறுதியானது.தொடர்ந்தும் ஹரிஷனால் நான்காவது கோல் போடப்பட 2019 ஆம் ஆண்டின் வன்னிச்சமர் காதநாயாகர்களாக உருத்திரபுரம் அணியினர் தெரிவு செய்யப்பட்டனர். இப் போட்டித் தொடரின் அதிக கோல்கள் அடித்தவருக்கான விருதினை உருத்திரபுரம் அணியின் ஹரிஷன் (Morrison Harrison) அவர்களும், இப் போட்டித் தொடரின் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதினை உருத்திரபுரம் அணியின் குணேஷ் (Sivalingam Kunesh ) அவர்களும் பெற்றுக்கொண்டனர். 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 🏆 இப் போட்டிக்காக உழைத்த வீரக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்..
Share: